சேலம் மாநகரில் 3 ஏரிகள் புனரமைக்கும் பணி


சேலம் மாநகரில் 3 ஏரிகள் புனரமைக்கும் பணி
x
சேலம்

சூரமங்கலம்:-

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் 86 ஏக்கர் பரப்பளவில் மூக்கனேரி உள்ளது. இந்த ஏரி ரூ.23 கோடியில் புனரமைத்து அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதே போன்று சூரமங்கலம் மண்டலத்தில் 20 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள போடிநாயக்கன்பட்டி ஏரி ரூ.19 கோடியிலும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் 23 ஏக்கர் பரப்பளவில் உள்ள அல்லிக்குட்டை ஏரி ரூ.10 கோடியிலும் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி 3 ஏரிகளும் மொத்தம் ரூ.52 கோடியில் புனரமைத்து அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது தூர்வாருதல், ஏரிகளில் நிலத்தடி நீர் சேமித்தல், ஏரிகளின் கரைகளை வலுப்படுத்துதல் மற்றும் கல் பதித்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் கண்காணிப்பு பொறியாளர் ரவி, துணை ஆணையாளர் அசோக்குமார், செயற்பொறியாளர் திலகம், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் முருகன், சமூக ஆர்வலர் சதீஷ்குமார், கவுன்சிலர்கள் பிரதீப், செல்வராஜ் உள்ப பலர் கலந்து கொண்டனர்.


Next Story