வேலூர் கோட்டைக்கு வரும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
வேலூர் கோட்டைக்கு வரும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
வேலூர் கோட்டைக்கு வரும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
வேலூர் கோட்டை
வேலூர் கோட்டையில் சுற்றித்திரிந்த காதல் ஜோடிகளை இளைஞர்கள் வீடியோ எடுத்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதல் ஜோடிகளை வீடியோ எடுத்ததாக சிறுவன் உளபட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மேலும் வேலூர் கோட்டைக்கு வருபவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே அமர்ந்து அத்துமீறும் காதல் ஜோடிகளுக்கு கோட்டை மதில்சுவர் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. போலீசார் அடிக்கடி ரோந்து செல்கின்றனர்.
ஆட்டோக்களை...
'ஹெல்மெட்' அணியாமல் மோட்டார் சைக்கிளில் கோட்டைக்கு வந்தவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. சிலர் காந்தி சிலை பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு உள்ளே நடந்து சென்றனர். சிலர் கோட்டைக்கு செல்லாமல் திரும்பி சென்றனர்.
ஆட்டோக்களையும் கோட்டைக்குள் அனுமதிக்கவில்லை. நுழைவு வாயில் பகுதியில் போக்குவரத்து போலீசார் ஆட்டோக்களை திருப்பி அனுப்பினர்.
மேலும் கோட்டையின் உள்ளே காவல் உதவி மையமும் நேற்று நிறுவப்பட்டது. அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.