ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் பிணமாக மீட்பு


ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் பிணமாக மீட்பு
x

அருமனை அருகே ரப்பர் தோட்டத்தில் தீக்காயங்களுடன் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் பிணமாக கிடந்தார். அவர் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

அருமனை,

அருமனை அருகே ரப்பர் தோட்டத்தில் தீக்காயங்களுடன் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் பிணமாக கிடந்தார். அவர் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் பிணம்

அருமனை அருகே உள்ள மஞ்சாலுமூடுவை அடுத்த தாணி மூடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. நேற்று ரப்பர் தோட்டப்பகுதியில் இருந்து புகையாக வந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் புகை மூட்டம் வந்த பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு ஆண் ஒருவர் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீயில் கருகி இறந்தவரை ஊர்மக்களிடம் காட்டினார்கள். அப்போது இறந்தவர் மஞ்சாலுமூடு அருகே மாலைக்கோடு சிறக்கரை பகுதியை சேர்ந்த பிரசன்ன குமார் (வயது 63) என்பதும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிய வந்தது.

காரணம் என்ன?

உடனே பிரசன்னகுமார் உடல் பிரேதபரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் பிரசன்னகுமார் இறந்து கிடந்த ரப்பர் தோட்டம் அவருக்கு சொந்தமானது என்றும், ரப்பர் தோட்டத்தில் தீப்பிடித்ததால், அதை அணைக்க அவர் சென்ற போது தீயில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரசன்னகுமாருக்கு பிந்து என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story