முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூரில், முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 23-ந் தேதி நடக்கிறது
திருவாரூர்
திருவாரூர்;
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-முன்னாள் படைவீரர்கள் மற்றும் அதனை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள்குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் வருகிற 23-ந் தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம். மனு அளிக்கும் போது தங்கள் அடையாள அட்டை நகலினை இணைத்து கொடுக்கவேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story