பந்தய மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வுபெற்ற பெண் இன்ஸ்பெக்டர் பலி


பந்தய மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வுபெற்ற பெண் இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 13 Jun 2022 12:20 AM IST (Updated: 13 Jun 2022 6:43 AM IST)
t-max-icont-min-icon

மண்ணிவாக்கம் அருகே பந்தய மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வுபெற்ற பெண் இன்ஸ்பெக்டர் பலியானார்.

சென்னை

சென்னை,

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வகுமாரி(வயது 61). ஓய்வுபெற்ற பெண் இன்ஸ்பெக்டர். இவர், நேற்று காலை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக மொபட்டில் சென்றுக்கொண்டிருந்தார்.

மண்ணிவாக்கம் அருகே செல்லும் போது அதே சாலையில் 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்னல் வேகத்தில் வந்த பந்தய மோட்டார் சைக்கிள், செல்வகுமாரி ஓட்டிவந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த செல்வகுமாரி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விஸ்வா என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் பலியான செல்வகுமாரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story