ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி,
ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும் புகார் மனுக்களின் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தாமதமின்றி அரசு நிர்ணயித்த கால வரையறைக்குள் முடிக்கவேண்டும், ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட அனைத்துத்துறை ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராமு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாதம் ஒரு முறை ஓய்வூதியர் குைறதீர்க்கும் கூட்டம் நடத்தி, குறைகளுக்கு தீர்வு காண வேண்டும். 1.4.2003-ந் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க அனுமதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.