ஓய்வு பெற்ற போலீஸ் அலுவலக ஊழியர் திடீர் சாவு


ஓய்வு பெற்ற போலீஸ் அலுவலக ஊழியர் திடீர் சாவு
x

பஸ்சில் அமர்ந்திருந்த ஓய்வு பெற்ற போலீஸ் அலுவலக ஊழியர் திடீரென இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் கூனியூரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 77). மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று இவர் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து பாபநாசம் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சுக்குள்ளேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story