ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை


ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை
x

ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே வேட்டை பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 72). ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. வீட்டில் உள்ளவர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story