ஓய்வு பெற்ற தபால் துறை அதிகாரி விபத்தில் பலி


ஓய்வு பெற்ற தபால் துறை அதிகாரி விபத்தில் பலி
x

விருதுநகரில் ஓய்வு பெற்ற தபால் துறை அதிகாரி விபத்தில் பலியானார்.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் சூலக்கரை பாலன் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 72). பணி ஓய்வு பெற்ற தபால்துறை அதிகாரியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆமத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நான்கு வழி சாலையில் சென்றார். அப்போது நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் இருசக்கர வாகனத்தில் மோதியதில் தர்மலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி இவரது மனைவி பாப்பா (63) கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் பஜார் போலீசார் காரை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த அசோக் (39) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story