ஓய்வு பெற்ற தபால் ஊழியர் மோட்டார் சைக்கிள் மோதி பலி


ஓய்வு பெற்ற தபால் ஊழியர் மோட்டார் சைக்கிள் மோதி பலி
x

அஞ்சுகிராமம் அருகே ஓய்வு பெற்ற தபால் ஊழியர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்.

அஞ்சுகிராமம் அருகே உள்ள தெற்கு பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது69), ஓய்வுபெற்ற தபால் ஊழியர். இவர், சம்பவத்தன்று மாலையில் ஜேம்ஸ் டவுன் சிவசுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது, நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம் நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் சந்திரசேகர் மீது மோதியது. இதில் சந்திரசேகர் படுகாயம் அடைந்தார். உடனே, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story