ஓய்வு பெற்ற பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை


ஓய்வு பெற்ற பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கருமண்டபத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

கருமண்டபத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓய்வு பெற்ற பேராசிரியர்

திருச்சி கருமண்டபம் ஜெயா நகர் விஸ்தரிப்பு வசந்த நகரை சேர்ந்தவர் ஆனந்த நாராயணன்(வயது 63). இவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி தேவி(62). இவர் சுற்றுலா துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த விபத்தில் அவர் இறந்துவிட்டார். இதனால் ஆனந்த நாராயணன் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

தற்கொலை

இந்நிலையில் அவர் சம்பவத்தன்று தனது வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை தேவி மாடிக்கு சென்று பார்த்தபோது, ஆனந்த நாராயணன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். மேலும் இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story