ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் சங்க ஆண்டு விழா


ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் சங்க ஆண்டு விழா
x

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட அனைத்து இந்திய ரெயில்வே ஓய்வு ஊழியர் சங்க ஆண்டு விழா தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலைய வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு சேதுராஜ் தலைமை தாங்கினார் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற ரெயில்நிலைய மேலாளர்கள் லயனல், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவி் சங்க செயல் தலைவர் நெல்சன் பொன்ராஜ், செயலாளர் மணிமொழியார், பொருளாளர் மோகன், இணை செயலாளர் ராமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story