ஓய்வு பெற்ற மோப்ப நாய் அர்ஜூன் சாவு


ஓய்வு பெற்ற மோப்ப நாய் அர்ஜூன் சாவு
x

ஓய்வு பெற்ற மோப்ப நாய் அர்ஜூன் செத்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோப்பநாய் பிரிவில் அர்ஜூன் என்ற துப்பறியும் மோப்ப நாய் இருந்தது. இது கடந்த 8 வருடங்களாக நாட்டின் முக்கிய தலைவர்களான குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், கவர்னர், தமிழக முதல்-அமைச்சர் ஆகியோரின் பாதுகாப்பு பணிகளில் வெடிபொருள் சோதனை செய்யும் பணிகளில் சிறப்பாக பணிபுரிந்துள்ளது. குறிப்பாக முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பணிபுரிந்துள்ளது. அர்ஜூன் மாநில அளவில் நடந்த போட்டியில் வெள்ளி பதக்கமும், இந்திய அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டுள்ளது. சிறப்பாக பணிபுரிந்த அர்ஜுன் வயது முதிர்வின் காரணமாக கடந்த 2021 ஆண்டு ஓய்வு பெற்று தொடர்ந்து மோப்பநாய் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் திருக்கோகர்ணம் அரசு கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மோப்பநாய் அர்ஜூன் இறந்து விட்டது. மேலும் மோப்பநாய் அர்ஜுன் பிரேத பரிசோதனைக்கு பின்பு ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோப்பநாய் பிரிவு வளாகத்தில் வைக்கப்பட்டது. மோப்பநாய் அர்ஜுன் உடலுக்கு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Next Story