ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி சாவு


ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி சாவு
x

கண்ணமங்கலம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே ஆண்டிப்பாளையம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46), ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திவ்யதர்ஷினி, ரேஷ்மா ஆகிய மகள்களும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1½ ஆண்டாக கவிதா காட்பாடியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மாரிமுத்து கடந்த 17-ந் தேதி இரவு வீட்டில் ரத்தகாயங்களுடன் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கவிதா கள்ளக்காதலன் செட்டித்தாங்கலை சேர்ந்த சங்கர் மற்றும் சிறுமூர் பாபு என்ற திருமாலன், அடையபுலம் பிரகாஷ்ராஜ், அப்பு ஆகியோருடன் சேர்ந்து மாரிமுத்துவை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து கவிதா, சிறுமூர் பாபு, அடையபுலம் பிரகாஷ்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அப்புவை போலீசார் கொங்கராம்பட்டு பகுதியில் கைது செய்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மாரிமுத்து பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து கொலைமுயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story