ஓய்வு பெற்ற ஆசிரியை தற்கொலை
உசிலம்பட்டியில் மாடியில் இருந்து குதித்து ஓய்வு பெற்ற ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியில் ஒச்சாத்தேவர் தெருவை சேர்ந்தவர் நல்லகுரும்பன். இவருடைய மனைவி தமிழ்த்தாய்(வயது 70). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது வீட்டு அருகே நிலஅளவை செய்யப்பட்டது. அப்போது நிலஅளவையாளர் பிச்சைமணி இருபுறமும் எல்லை கிடைக்காததால் வேறு ஒருநாள் நிலத்தை அளந்து கொள்ளலாம் என இருதரப்பினரையும் அழைத்து கூறி விட்டு சென்று விட்டார்.
ஒவ்வொரு முறையும் நிலஅளவை செய்யும் போது இவ்வாறு தான் கூறுகிறார்கள் என்று மன உளைச்சலுக்கு உள்ளாகிய தமிழ்த்தாய் (வயது 70) விரக்தி அடைந்து வீட்டின் முதல்மாடி பால்கனியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.