ஓய்வு பெற்ற ஆசிரியை பலி


ஓய்வு பெற்ற ஆசிரியை பலி
x

மன்னார்குடியில் ஸ்கூட்டரும் காரும் மோதிக்கொண்டதில் ஓய்வு பெற்ற ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர்

மன்னார்குடி;

மன்னார்குடியில் ஸ்கூட்டரும் காரும் மோதிக்கொண்டதில் ஓய்வு பெற்ற ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

கார் மோதியது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோபிரளயம் பகுதியை சேர்ந்தவர் சுசீலா(வயது 64). ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஆசிரியரான இவர் நேற்று தனது வீட்டில் இருந்து மன்னார்குடி- மதுக்கூர் சாலையில் உள்ள மாடர்ன் நகரை நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது மன்னார்குடியில் இருந்து மதுக்கூர் நோக்கி வந்த கார், சுசீலா ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் படுகாயம் அடைந்த சுசீலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story