தூக்கில் பிணமாக தொங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர்


தூக்கில் பிணமாக தொங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர்
x

வேளாங்கண்ணி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் காரப்பிடாகை வடக்கு ஸ்டாலின் நகர்பகுதியை சேர்ந்தவர் தெய்வராசு (வயது 69).இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். தெய்வராசு மட்டும் காரப்பிடாகை வடக்கில் உள்ள அவருக்கு சொந்தமான கூரை வீட்டில் வசித்து வந்தார்.இந்தநிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியினர் அங்கு சென்று பார்த்த போது வீட்டுக்குள் தெய்வராசு தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக தொங்கியுள்ளார்.இது குறித்து கீழையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தெய்வராசு தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story