ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க கூட்டம்


ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க கூட்டம்
x

மயிலாடுதுறையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சண்முகம் வரவேற்று பேசினார். செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம் கூட்ட அறிக்கையினை படித்தார். பொருளாளர் தியாகராஜன் வரவு-செலவு கணக்கினை தாக்கல் செய்தார். கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படும் தொகையை மீண்டும் ரூ.300 ஆக குறைக்க வேண்டும். 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதிய உயர்வு அளிப்பதாக தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியர்களுக்கு குடும்ப நல நிதியாக ரூ.2½ லட்சம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்ட கருவூலத்தில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் இணை செயலாளர் மாலதி, துணைத்தலைவர் ராஜாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Next Story