ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:30 AM IST (Updated: 27 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு பஞ்சப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் என்று கூறி நெல்லையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு பஞ்சப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் என்று கூறி நெல்லையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்கத்தின் நெல்லை மண்டலத்தின் சார்பில் நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தாமிரபரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.

மண்டல தலைவர் தாணுமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமையாபாண்டியன், செல்வராஜ், ராஜன், கிருபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வு பெற்றோர் ஒருங்கிணைப்பு குழுவின் நெல்லை மாவட்ட தலைவர் கோமதிநாயகம் தொடக்க உரையாற்றினார்.

பழைய ஓய்வூதிய திட்டம்

ஓய்வு பெற்றவர்களுக்கு 2015 நவம்பர் மாதத்தில் இருந்து முடக்கப்பட்ட பஞ்சப்படி உயர்வினை நிலுவையுடன் வழங்க வேண்டும். மருத்துவபடி ரூ.300 வழங்க வேண்டும். வாரிசு பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், வெங்கடாசலம், சிவதாணுதாஸ், பழனி, சுப்பையா முத்தையா, தர்மராஜ் பெலிக்ஸ் சூசைமிக்கல், பூதலிங்கம், மின் ஊழியர் மத்திய அமைப்பு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் சுடலைராஜ், அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. தலைவர் காமராஜ், அரசு விரைவு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story