ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி தலைமை அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், மாநில பொருளாளர் நேருதுரை உள்பட பலர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அகவிலைப்படி உயர்வு வழக்கில் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தவேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஓய்வூதிய திட்டத்தை அரசே பொறுப்பேற்று நடத்தவேண்டும், தனியார்மய நடவடிக்கையை கைவிடவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story