பணிஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா
தூத்துக்குடியில் பணிஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிக்கூடங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 11 தமிழாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட தமிழக தமிழாசிரியர் கழக தலைவர் தமிழ்ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தர்சிங் முன்னிலை வகித்தார். ஆசிரியை மேரி சீதா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் ஆறுமுகம், பொதுச் செயலாளர் நாகேந்திரன் பொறுப்புத்தலைவர் சரவணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம், ஆதி.அருமைநாயகம், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சுரேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி பேசினர். விழாவில் தமிழாசிரியர் பாலகிருஷ்ணன் எழுதிய தடைக்கல்லே தகர்ந்து போ என்ற புத்தகத்தை சிறப்பு தலைவர் ஆறுமுகம் வெளியிட அருள்மொழி நங்கை பெற்றுக் கொண்டார். ஆசிரியர் பூபால் செல்லையா நூல் அறிமுக உரையாற்றினார்.
விழாவில் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். மணப்பாடு பள்ளி தமிழாசிரியர் மைக்கேல் நன்றி கூறினார்.