தூத்துக்குடியில்ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
தூத்துக்குடியில்ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிதேலிஸ் வல்தாரிஸ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மற்றும் நகராட்சி ஒய்வூதியர்கள் சங்க தலைவர் மாடசாமி, ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க துணைத்தலைவர் அந்தோணிசாமி வரவேற்று பேசினார். ஓய்வூபெற்ற போலீஸ் கீதாசெல்வமாரியப்பன், ஓய்வுபெற்ற வருவாய்துறை அலுவலர் பிச்சையா கர்டோசா, ஓய்வுபெற்ற நகராட்சி அலுவலர் குமரகுரு ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு பலன்களை முழுமையாக வழங்க வேண்டும். அதில் ஏதுவும் குறைபாடுகள் இருந்தால் கருவூல துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் பால்ராஜ், சண்முகவேல், மேரியம்மாள், ஜவஹர்லால் நேரு, செயலாளர் ஐயம்பிள்ளை, பொருளாளர் சுப்பிரமணியன் உள்பட அனைத்து துறை ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்பு செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.