ஓய்வூதியர்கள் தபால்காரரிடம் உயிர் வாழ் சான்று பெறலாம்


ஓய்வூதியர்கள் தபால்காரரிடம்  உயிர் வாழ் சான்று பெறலாம்
x

ஓய்வூதியர்கள் தபால்காரரிடம் உயிர் வாழ் சான்று பெறலாம் என்று ஈரோடு தபால் கோட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளாா்.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு தபால் கோட்ட கண்காணிப்பாளர் கே.அருணாசலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்று காரணமாக ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகள் விலக்கு அளித்து இருந்தது. தற்போது வருகிற ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

எனவே ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தங்கள் வீட்டு வாசலிலேயே பெறும் வகையில் இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி மற்றும் தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்று பெறுவதற்கு நேரில் செல்லும்போது ஏற்படும் இடர்பாடுகள், பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் ஜீவன் பிரமாண் திட்டத்தின் மூலம் ஓய்வூதியர்களின் வீட்டு வாசலிலேயே அவர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று வழங்கப்பட உள்ளது. இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் மூலம் தபால்காரர் இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்குவார். சேவைக்கட்டணமாக ரூ.70 மட்டும் செலுத்தினால் போதும். ஓய்வூதியர்கள் ஒருசில வினாடிகளில் உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஈரோடு தபால் கோட்ட கண்காணிப்பாளர் கே.அருணாசலம் கூறி உள்ளார்.


Next Story