பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
x

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

2012-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பல காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில், தற்போது 12 ஆயிரம் பேர் ரூ.10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை பகுதி நேர ஆசிரியர்கள் கையாளுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story