ஓய்வுபெறும் நாளில் 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம்


ஓய்வுபெறும் நாளில் 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
x

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓய்வுபெறும் நாளில் 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர்

குற்றச்சாட்டு குறிப்பாணை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனராக (தணிக்கை) ஆனந்த் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் திருவண்ணாமலையில் பணியாற்றியபோது சில புகாரில் இவர் மீது குற்றச்சாட்டு குறிப்பாணை உள்ளது. இதற்கு அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோல வேலூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் உதவி திட்ட அலுவலராக பணியாற்றி வந்தவர் பாபு. இவர் திருவண்ணாமலையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய போது இவர் மீது குற்றச்சாட்டு குறிப்பாணை நிலுவையில் உள்ளது.

பணியிடை நீக்கம்

மேலும் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் சேகர் மீதும் புகார்கள் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் மேற்கண்ட 3 அதிகாரிகள் மீது விசாரணை நிலுவையில் உள்ளதால், கடந்த 31-ந் தேதி ஓய்வுபெற இருந்த நிலையில் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.


Next Story