மத்திய தொழில் பாதுகாப்பு படை மோப்பநாய்க்கு பணி ஓய்வு
மத்திய தொழில் பாதுகாப்பு படை மோப்பநாய்க்கு பணி ஓய்வு அளிக்கப்பட்டது.
திருச்சி
செம்பட்டு, ஆக.30-
திருச்சி விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையில் மோப்பநாய் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக பணியில் இருந்து வந்த 'பிளன்சி' என்று மோப்ப நாய்க்கு நேற்றுடன் பணி நிறைவு அளிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளும், விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரிசிங் நயால் உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனர். முன்னதாக மோப்பநாய் பிரிவு போலீசார் பிளன்சியை நான்கு சக்கர வாகனத்தின் மேலே அமர்த்தி, அதற்கு மாலை அணிவித்து, வாகனத்தின் இருபுறமும் கயிறுகளால் இணைத்து விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் பிளன்சிக்கு சான்றிதழ், கேடயம் உள்ளிட்டவை வழங்கி, அதற்கு பணி ஓய்வு வழங்கி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story