ஜமாபந்தியில் 60 மனுக்களுக்கு தீர்வு
திருவாரூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 60 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் ஜமாபந்தி சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது. அதன்படி திருவாரூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தலைமையில் ஜமாபந்தி நடந்தது. தாசில்தார் நக்கீரன் முன்னிலை வகித்தார். ஜமாபந்தியில் பட்டா மாறுதல், முதியோர் உதவிதொகை உள்ளிட்ட 335 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 60 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதி உள்ள மனுக்கள் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், தலைமையிடத்து துணை தாசில்தார் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story