ஜமாபந்தி தொடக்கம்
பேராவூரணியில், இன்று ஜமாபந்தி தொடங்குகிறது.
தஞ்சாவூர்
பேராவூரணி;
பேராவூரணி வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் பொருட்டு, ஜமாபந்தி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர் தலைமையில், பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் நடக்கிறது. இன்று(வியாழக்கிழமை) பெருமகளூர் சரகத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கும், 16-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) குருவிக்கரம்பை சரகத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கும், 17-ந் தேதி(புதன்கிழமை) ஆவணம் சரகத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கும், 18-ந் தேதி( வியாழக்கிழமை) பேராவூரணி சரகத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கும் வருவாய் தணிக்கை நடைபெற உள்ளது. இந்த தகவலை பேராவூரணி தாசில்தார் சுகுமார் தெரிவித்துள்ளாா்.
Related Tags :
Next Story