பூதலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி


பூதலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
x

பூதலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நாளை தொடங்குகிறது

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

பூதலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாய தணிக்கை (ஜமாபந்தி) நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது குறித்து பூதலூர் தாசில்தார் பெர்ஷியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பூதலூர் தாலுகாவில் ஜமாபந்தி தஞ்சை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நாளை முதல் நடக்கிறது. நாளை(வியாழக்கிழமை) அகர பேட்டை சரகத்துக்கும் 16-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) திருக்காட்டுப்பள்ளி சரகம், 17-ந் தேதி பூதலூர் சரகம், 18-ந் தேதி செங்கிப்பட்டி சரக வருவாய் கணக்குகள் தணிக்கை செய்யப்பட உள்ளது. குறிப்பிட்ட நாட்களில் பூதலூர் தாலுகா பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அதிகாரி தஞ்சை வருவாய் கோட்ட அலுவலரிடம் அளித்து தீர்வு காணலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story