வருவாய் துறை அலுவலர் சங்க மாநாடு


வருவாய் துறை அலுவலர் சங்க மாநாடு
x

பணிநிறைவு பெற்ற வருவாய் துறை அலுவலர் சங்க மாநாடு நடைபெற்றது

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்ட பணிநிறைவு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க 23-வது மாவட்ட மாநாடு நெல்லை சந்திப்பில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் எஸ்.முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் பேசினார்.

நெல்லை மாவட்ட முன்னாள் கலெக்டரும், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய துணைத்தலைவருமான கோவிந்தராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். செயலாளர் அகமது முஸ்தபா, பொருளாளர் சொக்கலிங்கம், துணைத்தலைவர் முத்து முகமது, செயற்குழு உறுப்பினர் ஆவுடையப்பன் ஆகியோர் அறிக்கைகள், தீர்மானங்களை வாசித்தனர்.

செங்கோட்டை தென்னிந்திய காந்திய கிராம நிர்மாண சேவாதளம் தலைவர் காந்தியவாதி விவேகானந்தன், 75 வயது நிறைவுபெற்ற சங்க உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பேசினார். டாக்டர் பாலகிருஷ்ணன் முதியோர் நலம் குறித்து ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில், மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கியது போன்று தமிழக அரசும் வழங்க வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியாக ரூ.1,000 வழங்குவது போன்று தமிழக அரசும் வழங்க வேண்டும். புதிய மருத்துவ நல காப்பீட்டு திட்டத்தின் பிரீமிய தொகையை குறைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தபால் இலாகா கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story