வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்


வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2023 1:15 AM IST (Updated: 21 Sept 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை அட்டை அணிந்து வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து போராட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின் டல்லஸ் தலைமை தாங்கினார். செயலாளர் சுகந்தி வரவேற்றார். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக, கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தையின்போது அரசால் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் பூங்கொடியிடம் மனு கொடுத்தனர். இதேபோல் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திலும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்களின் போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) நடக்கிறது.


Related Tags :
Next Story