வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:30 AM IST (Updated: 16 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி உயர்வில் பாரபட்சம் இன்றி முதுநிலையை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் அருணாசலம், முன்னாள் மாவட்ட தலைவர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் மாநில பொருளாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story