சோளிங்கரில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்க மாநாடு
சோளிங்கரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் இரண்டாவது வட்ட மாநாடு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.
சோளிங்கர்
சோளிங்கரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் இரண்டாவது வட்ட மாநாடு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.
மாநாட்டிற்கு சோளிங்கர் வட்டத்தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் நந்தன், வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர்கள் பரந்தாமன், தயாளன் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில தலைவர் திருமலைவாசன், மாநில பொதுச்செயலாளர் ரவி, மாநில துணைத்தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்்.
கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் என்ற வரம்பை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், பழைய முறையிலான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு ஓய்வு பெறுகின்ற போது பணப்பலணை 50சதவீதம் வழங்க வேண்டும், கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும், ஓட்டுனர் பதவி உயர்வு வழங்க வேண்டும், போனஸ் நாள் கணக்கிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் வட்ட துணைத்தலைவர் ரங்கநாதன், இணைச்செயலாளர்கள் தாட்சாயணி, வடிவேல், ரத்னா, பிரபு, cs;gl பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர்கள் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் நன்றி கூறினர்.