நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தேனி
பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து நீர்வரத்து ஏற்படும். தற்போது அருவிக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் மற்றும் அருவி பகுதியில் மழை பெய்தது. இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதையடுத்து அருவியின் முன்புற கதவு அடைக்கப்பட்டது. நீர்வரத்து சீரான பிறகு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story