வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கைத்தறித்துறை ஆணையர் ஆய்வு


வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கைத்தறித்துறை ஆணையர் ஆய்வு
x

வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கைத்தறித்துறை ஆணையர் ஆய்வு செய்தனர்.

கரூர்

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் தலைமையில், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தனர்.

முதலில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.புதுக்கோட்டை மற்றும் வலையல்காரன்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்வதை பார்வையிட்டு, உணவின் தரம் மற்றும் சுவையினை தெரிந்துகொள்ள குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்தி ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து வலையல்காரன்புதூர் தொக்கப்பள்ளில் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் கூடுதல் சமையல்அறை கூடத்தையும், ரெங்கநாதபுரம் ஊராட்சி சாந்திநகரில் ரூ.22 லட்சத் 59 ஆயிரம் மதிப்பில் ஜல் - ஜீவன் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அனைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதையும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புத்தாம்பூர் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் பழுதுநீக்கம் செய்யப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து சமத்துவபுரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை கணக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


Next Story