நூலகத்தில் திறனாய்வு கூட்டம்
நூலகத்தில் திறனாய்வு கூட்டம் நடைபெற்றது
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டத்தின் சார்பில் கவிஞர் பாப்பா குடி செல்வமணி எழுதி வெளியிட்ட 'ஒரு வரவேற்பறையின் வாக்குமூலம்' கவிதை நூல் திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் சரவணகுமார் வரவேற்றார். முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முனைவர் கணபதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கவிஞர்கள் சுப்பையா, வைகுண்டமணி, தாணப்பன், சக்தி, வேலாயுதம், திருவள்ளுவர் கழக சொக்கலிங்கம், ஓவியர் சண்முகம், ஆசிரியர் சோமசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் சிற்பி பாமா நூலை திறனாய்வு செய்து பேசினார். நூலாசிரியர் பாப்பாக்குடி செல்வமணி ஏற்புரை வழங்கினார். முடிவில் நூலகர் அகிலன் முத்துகுமார் நன்றி கூறினார்.
இதில் வாசகர் வட்டத்தின் சார்பில் இசக்கி, சதாசிவம், பத்ரிநாராயணன், நடராஜன், துரைராஜ், பாக்கியராஜ், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நூல்களும், புரவலர்களுக்கு பட்டயமும் வழங்கப்பட்டது.