ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்


ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
x

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலக பணியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகள்குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்கவும், தமிழக முதல்-அமைச்சர் அறிவிக்கும் அரசின் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும், குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதிஷ்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story