அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம்


அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன் சோங்கம் ஜடக் சிரு தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம் பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல், ஜல் ஜீவன் மிஷன், அம்ருத் 2.0, ஸ்வச் பாரத் மிஷன் 2.0, நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல், பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளி கட்டிடங்கள் உள்கட்டமைப்பு, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம், முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான பள்ளிகளில் காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனைத்து துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மைக்கேல் ஆண்டனி பெர்னாண்டோ, மகளிர் திட்ட இயக்குனர் குருநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story