புதிய கட்டிட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
புதிய கட்டிட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது சுகாதாரத்துறை பயன்பாட்டிற்காக கட்டப்படும் புதிய கட்டிட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை பயன்பாட்டிற்காக புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், புதிய நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடங்கள், துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், புறநோயாளிகள் பிரிவு கட்டிடங்கள், மகப்பேறு பிரிவு கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், வட்டார பொது சுகாதார மைய கட்டிடங்கள், செவிலியர் குடியிருப்பு ஆகிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
15-வது நிதிக்குழு, தேசிய நலவாழ்வு திட்டம், அனைவருக்கும் நலவாழ்வு திட்டம், நமக்கு நாமே திட்டம் ஆகிய திட்டங்களில் அனைத்து வட்டாரங்களிலும் இந்த கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் குறித்த முன்னேற்ற பணிகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.