கோர்ட்டு நிலுவை வழக்குகள் குறித்து ஆய்வு கூட்டம்


கோர்ட்டு நிலுவை வழக்குகள் குறித்து ஆய்வு கூட்டம்
x

திருப்பத்தூரில் கோர்ட்டு நிலுவை வழக்குகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கோர்ட்டில் உள்ள நிலுவை வழக்குகள் குறித்து அரசு வழ க்கறிஞர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. அப்போது கலெக்டர் பேசுகையில் மாவட்டத்தில் நிலுவையில உள்ள வழக்குகளை முடிக்க அரசு அலுவலர்கள் வழக்கின் தன்மை குறித்து உடனுக்குடன் பதில் அளிக்க வேண்டும். மேலும் அரசு வழக்கறிஞர்கள் விரைந்து செயல்பட்டு குற்ற வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும். கோர்ட்டுகளில் குற்றவழக்குகள் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், அரசு குற்றவியல் வழக்கறிஞர் பி.டி.சரவணன், கூடுதல் அரசு வழக்கறிஞர் எம்.சரவணள், வருவாய் ேகாட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா மற்றும் அனைத்து தாசில்தார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story