மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வு கூட்டம்


மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வு கூட்டம்
x

குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.அந்த வகையில். திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட ப.கொந்தகை, இந்திராநகர், தாவூத் நாச்சியார் குடியிருப்பு, வெள்ளத்திடல், தைக்கால் தெரு, ஆண்டவர்நகர், தோப்பு தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா தலைமை தாங்கினார்.செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திட்டச்சேரி-நாகூர் சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும், மரைக்கான்சாவடி சுடுக்காட்டிற்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும், திட்டச்சேரி பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும், வெள்ளத்திடலில் பொது கழிவறை அமைக்க வேண்டும், இந்திராநகர் -தைக்கால் தெரு பகுதிகளில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story