அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்


அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2022 7:45 PM GMT (Updated: 19 Oct 2022 7:45 PM GMT)

சேலத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவசண்முகராஜா தலைமையில் நேற்று நடந்தது.

சேலம்


சேலத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவசண்முகராஜா தலைமையில் நேற்று நடந்தது.

ஆய்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவசண்முகராஜா கலந்து கொண்டு பருவ மழையின் போது செயல்படுத்த வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.

திட்டப்பணிகள்

முன்னதாக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் மருந்துகளின் இருப்பு, மருத்துவ உள்கட்டமைப்பு, வளாக தூய்மை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், குரும்பப்பட்டி ஊராட்சி, வாரக்காடு பொன்னி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் மற்றும் அதன் இருப்பு குறித்தும், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் திடீர் ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கணசாலை பேரூராட்சி மற்றும் வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.652 கோடியே 84 லட்சத்தில் நடைபெற்று வரும் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு நடத்தினார். பின்னர் பாப்பம்பட்டி ஊராட்சி, தச்சான்காட்டூர் பகுதியில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.12 கோடியே 22 லட்சத்தில் வீடுகள் கட்டும் பணியை பார்வையிட்டனர்.


Next Story