அனைத்து திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு


அனைத்து திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு
x

அனைத்து திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை செயல்பாடுகள் குறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் மதிவாணன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்றுக்காலத்தில் முன்கள பணியாளராக பணியாற்றிய போது மரணமடைந்த பணியாளர்களின் வாரிசுதாரருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவியையும், வருவாய்த்துறையில் பணியாற்றியபோது மரணம் அடைந்த 2 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குனர் திலகவதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.



Related Tags :
Next Story