வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு
வேதாரண்யத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சிகளின் இணை இயக்குனர் பூங்கொடி அருமைகண் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வேதாரண்யம் நகராட்சி அலுவலகம் எதிர்புறம் அமைந்துள்ள உப்பு குளம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை பார்வையிட்ட அவர், அந்தப் பணியை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினார். இதேபோல, நகராட்சி பகுதியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நகர்மன்றத் தலைவர் புகழேந்தி, ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம், சுகாதாரஆய்வாளர் அருள்முருகன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story