திட்டப்பணிகளை இணை இயக்குனர் ஆய்வு
திட்டப்பணிகளை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
இலுப்பூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை சென்னை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் (திட்டம்) மலையமான் திருமுடிக்காரி ஆய்வு செய்தார்.
இலுப்பூர் பேரூராட்சி நவம்பட்டி பூங்காவில் மியோவாக்கி காடுகள் முறையில் மரங்கள் நடப்பட்டுள்ளதையும், மூலதன மான்ய நிதித் திட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சங்கரன் ஊரணி மேம்பாடு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வீடு, வீடாக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பணியாளர்களால் தரம் பிரித்து வாங்கப்படுவதையும், பேரூராட்சியின் சமுதாய கூடம் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியில் பராமரிப்பு பணிகளையும், பஸ் நிலைய பொதுக் கழிப்பறை 15-வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோமுட்டி ஊரணி மேம்பாடு செய்யும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணி இடைவெளி நிரப்பும் நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதையும் மற்றும் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இயற்கை உரம், மண்புழு உரம் தயார் செய்தல் மற்றும் இதர பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் காளியப்பன், உதவிசெயற் பொறியாளர் இளங்கோவன், இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷாராணி, உதவிப் பொறியாளர் உதயக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் சகுந்தலா வைரவன் ஆகியோர் உடனிருந்தனர்.
அன்னவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வளமீட்பு பூங்கா, 25-வது நிதிக்குழு திட்டத்தில் பள்ளூரணி மேம்பாட்டுபணி உள்ளிட்ட பணிகளை இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, அன்னவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன், பேரூராட்சி மன்ற தலைவர் சாலை பொன்னம்மா மதுரம் ஆகியோர் உடனிருந்தனர்.