புதுப்பிக்கப்பட்ட பணிவிதிகளை பின்பற்ற வேண்டும்


புதுப்பிக்கப்பட்ட பணிவிதிகளை  பின்பற்ற வேண்டும்
x

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் புதுப்பிக்கப்பட்ட பணிவிதிகளை பின்பற்ற வேண்டும்

திருவாரூர்

கொரடாச்சேரி:

ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க பொதுச்செயலாளர் இளவரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொது வினியோக திட்டம் மற்றும் நெல் கொள்முதல் பணியை மேற்கொள்ள, தமிழக அரசால் 1972-ம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் உருவாக்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு 1989-ம் ஆண்டு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு என தனி பணி விதிகள் ஏற்படுத்தப்பட்டது. தமிழக அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் அரசாணைகள், நுகர்பொருள் வாணிபக்கழக குழும கூட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பணி விதிகள் நடைமுறை செய்யப்படும். இந்த வகையில் தற்போது மாற்றம் செய்யப்பட்ட பணி விதிகளை நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பின்பற்றாமல், பழைய நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களின் எதிர்கால நலன் கருதி, மாற்றம் செய்யப்பட்ட பணி விதிகளை பின்பற்ற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story