நெல் விதை மானிய விலையில் வினியோகம்


நெல் விதை மானிய விலையில் வினியோகம்
x

நெல் விதை மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா பருவத்துக்கு தேவையான நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல் ரகங்களான ஆர்.என்.ஆர். 15048 ஆதார விதைகள் மற்றும் சான்று விதைகள் 3,140 கிலோவும், டி.கே.எம். 13 ஆதார விதைகள் 2,945 கிலோவும் இருப்பு உள்ளது. இந்த நெல் விதைகள் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்களின் ஆதார், கைப்பேசி, சர்வே எண் ஆகிய ஆவணங்களை வழங்கி மானிய விலையில் நெல் விதைகளை வாங்கி பயன் பெறலாம் என்று மோகனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா தெரிவித்துள்ளார்.


Next Story