பலத்த காற்றில் சாய்ந்த நெற்கதிர்கள்
சிங்கம்புணரி அருேக பலத்த காற்றினால் நெற்கதிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருேக பலத்த காற்றினால் நெற்கதிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
விவசாயம்
சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்ட பிரான்மலை, ஒடுவன்பட்டி, வேங்கைபட்டி, வையாபுரி பட்டி, கோவில்பட்டி, கிருங்காகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரை நம்பி 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக பிரான்மலை மலை அடிவார பிரதேச பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் மழை பெய்து நெற்கதிர்கள் முளைத்து தற்போது 90 சதவீதம் விளைந்துள்ளது.
காற்றில் சாய்ந்த நெற்கதிர்கள்
அறுவடைக்கு தயாராகி கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையாலும் பலத்த காற்றாலும் நெற்கதிர்கள் சாய்ந்தன. இதை பார்த்த விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், இந்த பகுதியில் 3 மாதம் மற்றும் 5 மாதம் என பிரிக்கப்பட்ட நெல்மணிகள் நடவு செய்யப்பட்டு மழைநீர் மற்றும் கண்மாய்நீரை பயன்படுத்தியும் தற்போது 3 மாதத்தில் விளையக்கூடிய நெல்மணிகள் அனைத்தும் 90 சதவீதம் விளைந்து இன்னும் சில நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையாலும் பலத்த காற்றாலும் பிரான்மலை, கிருங்காகோட்டை, கோவில்பட்டி, வேங்கை பட்டி, . வையாபுரி பட்டி போன்ற பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்தன.
இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நெற்பயிர்கள் மழை நீராலும் காற்றாலும் சேதம் ஏற்பட்டதால் அரசு முறையான நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.