ரிஷி மெட்ரிக்பள்ளி ஆண்டு விழா
சீக்கராஜபுரம் ரிஷி மெட்ரிக்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், பெல் அருகே சீக்கராஜபுரத்தில் உள்ள ரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 18-வது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி செயலாளர் கார்த்திக் வரவேற்றார். பள்ளி முதல்வர் ராஜேந்திரன் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக புற்றுநோய் மருத்துவ விஞ்ஞானி விஸ்வநாதன் கலந்துகொண்டு பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். கவுரவ விருந்தினராக லோக் ஆயுக்தா நீதிபதி ராஜமாணிக்கம் கலந்துகொண்டு, பள்ளியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பள்ளி தாளாளர் டாக்டர் புகழேந்தி, நிர்வாக அலுவலர் ஏகாம்பரம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி துணை முதல்வர் மல்லீஸ்வரி நன்றி கூறினார்.