உற்பத்தி குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு


உற்பத்தி குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
x

உற்பத்தி குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல்,

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளான மரவாபாளையம், வேட்டமங்கலம், குளத்துபாளையம், குந்தாணி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து சவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் மரவள்ளி கிழங்கு மூலம் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் சவ்வரிசிஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் சேக்கோ சர்வ் மூலம் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் சவ்வரிசி தயார் செய்யும் மில் அதிபர்கள் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.8 ஆயிரத்துக்கு வாங்கி சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ9,500-க்கு வாங்கிச் சென்றனர். தற்ேபாது சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் மரவள்ளிக்கிழங்கை டன் ஒன்றுக்கு ரூ.9,500 க்கு வாங்கிச் செல்கின்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ12, ஆயிரத்துக்கு வாங்கி செல்கின்றனர். மரவள்ளி கிழங்கு உற்பத்தி குறைந்துள்ளதால் ‌மரவள்ளிக்‌கிழங்கின் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story